மழைக்காலத்தில் ஏற்படும் வறட்டு இருமல், சளி போன்ற உடல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் ஆட்டுக்கால் ரசம் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 10 துண்டு
எண்ணெய் – 2 ஸ்பூன்
வெங்காயம் – 1, தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
சின்ன வெங்காயம் – 10
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
கொத்தமல்லி – சிறிதளவு
பட்டை – 1 துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் – 2
மிளகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
செய்வது எப்படி:
ஆட்டுக்காலை நன்றாக கழுவி, லேசாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் ஆட்டுக்காலை சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.
மிக்ஸியில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து, அதை ரசத்தில் சேர்க்கவும்.
தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
இறுதியில் மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால் – சூடாகவும் சுவையாகவும் இருக்கும் இடிச்ச ஆட்டுக்கால் ரசம் ரெடியாகிவிடும்!
Summary :
This spicy and healthy mutton leg soup boosts immunity and helps fight cold and cough. A simple, tasty recipe perfect for rainy days.








