தென்காசி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு – சீமான் வெளியிட்ட தகவல்!

7
0

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தென்காசி தொகுதியின் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்துள்ளார்.

கனிம வள கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த வாரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் பின்னர், தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.

முன்னதாகவே வேட்பாளர் அறிவிப்பு!

இந்த பயணத்தின் போது, சுரண்டை அருகே மேலக்கலங்கல் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட சீமான்,
“வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் கௌஷிக் பாண்டியன் போட்டியிடுவார்” என அறிவித்தார்.

கௌஷிக் பாண்டியன், 2023-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்தவர். தற்போது அக்கட்சியின் மருத்துவர் பாசறை உறுப்பினராக செயல்படுகிறார். மேலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரல்!

சீமான் வெளியிட்ட இந்த அறிவிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், இத்தனை முன்பே வேட்பாளரை அறிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply