முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு, நரை முடி போன்ற பிரச்சனைகள் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. இவற்றில், நரைமுடியை இயற்கையாக கருப்பாக மாற்ற உதவும் எளிய ஹேர் டை ஒன்றை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
-
நெல்லிக்காய் பொடி – 2 ஸ்பூன்
-
இண்டிகோ பொடி – 2 ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
-
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி அதில் நெல்லிக்காய் பொடி மற்றும் இண்டிகோ பொடியை சேர்க்கவும்.
-
இதனை நன்கு கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
-
பிறகு கலவையை தலைமுடி முழுவதும் சமமாக தடவவும்.
-
இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருந்து, மென்மையான ஷாம்புவால் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை கழுவவும்.
இந்த இயற்கை டையை வாரம் ஒருமுறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நரைமுடி படிப்படியாக கருப்பாக மாறும்.








