வயது எவ்வளவு ஆனாலும் இளமையான தோற்றம் வேண்டுமென விரும்புவது அனைவருக்கும் பொதுவான ஆசையாகும். இயற்கை பொருட்களைக் கொண்டு இதை எளிதாகச் சாதிக்கலாம். இப்போது இரண்டு வகையான இயற்கை பேஸ்பேக் தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம்.

1. மஞ்சள்–தயிர் பேஸ்பேக்
தேவையான பொருட்கள்:
-
மஞ்சள் – 2 ஸ்பூன்
-
தயிர் – 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் தயிரை எடுத்து அதில் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை முகத்தில் சமமாகத் தடவி உலர வைக்கவும்.
பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் முகம் பிரகாசமாகவும் இளமையாகவும் இருக்கும்.
2. ஆரஞ்சு–தேன் பேஸ்பேக்
தேவையான பொருட்கள்:
-
ஆரஞ்சுச் சாறு – ½ கப்
-
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சுச் சாறை எடுத்து அதில் தேனை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி உலர வைக்கவும்.
காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் சருமம் இளமையாகவும் மென்மையாகவும் மாறும்.
Summary :
Discover simple DIY face packs with turmeric, curd, orange juice, and honey to maintain glowing, young-looking skin naturally and effectively.








