சிறுநீரக ஆரோக்கியத்திற்கான 5 இயற்கை தேநீர் வகைகள்!

166.jpg

சிறுநீரகத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையான சில மூலிகை பானங்கள் பெரும் உதவியாக உள்ளன. உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை நீக்கும் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாவிட்டால் பலவித பிரச்சினைகள் ஏற்படலாம். இதைத் தடுக்கவும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் 5 இயற்கை தேநீர் வகைகள் இங்கே காணலாம்.

1. இஞ்சி–புதினா தேநீர்

இஞ்சியிலும் புதினாவிலும் உள்ள உயிரியல் சேர்மங்கள் அழற்சியை குறைத்து, சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கத்தையும் அசௌகரியத்தையும் தணிக்கின்றன. புதினா சிறுநீர் எரிச்சலை குறைக்க உதவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் வைட்டமின் C மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கூடுதல் பலனளிக்கும்.

2. க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. இதை வழக்கமாக குடிப்பதால் சிறுநீரகக் கல் உருவாகும் அபாயம் குறையும். ஆனால் அளவாக மட்டுமே பருக வேண்டும்.

3. திரிபலா

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்த ஆயுர்வேத கலவையான திரிபலா, சிறுநீரகத்தை சுத்திகரிக்கப் பயன்படுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கம் மற்றும் நச்சுகளை குறைத்து திசுக்களைப் பாதுகாக்கின்றன.

4. செலரி ஜூஸ்

செலரி ஜூஸில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தி, வீக்கம் மற்றும் புரோட்டினூரியாவை குறைக்கின்றன. இதை தொடர்ந்து குடிப்பது சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

5. டேன்டேலியன் வேர் டீ

இந்த மூலிகை தேநீர் உடலிலிருந்து நச்சுகள் மற்றும் கூடுதல் திரவங்களை வெளியேற்றுகிறது. சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தி, நீர் தேக்கம் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

இவை அனைத்தும் சிறுநீரகத்தின் இயற்கை சுத்திகரிப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன.
எனினும், எந்தவொரு மருத்துவ பிரச்சினைக்கும் முன் நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம்.

Summary :
Learn about 5 powerful natural teas — from ginger-mint to dandelion root — that cleanse toxins and support kidney health naturally.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *