பெண்களுக்கு முகத்தின் அழகு முக்கியம். பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்ற தோல் போன்ற பிரச்சினைகள் முக அழகை பாதிக்கக்கூடும். ஆனால், ஒரே இரவில் முகத்தை பளிச்சென்று மாற்ற விரும்புகிறவர்களுக்கு காபி தூள் பயனுள்ளது.

தேவையான பொருட்கள்:
-
கற்றாழை ஜெல் – 4 ஸ்பூன்
-
காபி தூள் – 2 ஸ்பூன்
-
ஜோஜோபா எண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
-
ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், காபி தூள் மற்றும் ஜோஜோபா எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
-
கட்டிகள் இல்லாமல் ஒரே மாதிரியான ஜெல் பதம் உருவாகும் வரை கலக்கவும்.
-
இதனை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி அரை மணி நேரம் வைக்கவும்.
-
பிறகு கைகளை பயன்படுத்தி மெதுவாக மசாஜ் செய்யவும்.
-
முடிந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிக் கொள்ளவும்.
குறிப்பு:
இந்த காபி பேக் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகம் மென்மையாகவும் பளிச்சென்று மாறும்.
Summary :
Discover how to make and use a coffee face pack with aloe vera gel and jojoba oil to achieve glowing, radiant skin overnight.









