OYO Rooms Scam : ஓயோவில் இத்தனை கோடி மோசடியா? அதிர வைக்கும் தகவல்கள்!
ஓயோ ரூம்ஸ் மோசடி: உலகமெங்கும் பிரபலமான ஓயோ ஹோட்டல் நிறுவனம், நாள்தோறும் பல லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்தில் 22 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
பொய்யான முன்பதிவுகள் மூலம் ஓயோ நிறுவனம் வருவாய் ஈட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஓயோ உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் மீது 22 கோடி ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சில ஹோட்டல் முதலாளிகள் ஓயோ நிறுவனம் தங்களை ஏமாற்றியதாகப் புகார் கூறியுள்ளனர். ஓயோ தங்களது ஹோட்டல்களில் பொய்யான முன்பதிவுகளைச் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஓயோ நிறுவனம் முறைகேடான முன்பதிவுகள் மூலம் தனது வருமானத்தை உயர்த்திக் கொண்டதாகவும், இதனால் ஹோட்டல்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் ஓயோ ஹோட்டல் முன்பதிவில் மோசடி புகார் எழுந்துள்ளது. ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் மீது ஒரு ஹோட்டல் நிர்வாகி ரூ.22 கோடி மோசடி செய்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஜோத்பூரில் மட்டும் 10க்கும் மேற்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மாநில மற்றும் மத்திய ஜிஎஸ்டி நோட்டீஸ்கள் வந்துள்ளன. இது ஹோட்டல் உரிமையாளர்களுக்குப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஓயோ மோசடி புகார்:
ஆன்லைனில் புக் செய்து உடனே ரத்து, ஜிஎஸ்டி ஹோட்டல் உரிமையாளர்கள் கட்ட வேண்டும். தவறான வழியில் ஓயோ பணம் சம்பாதிப்பதாக புகார், விசாரணை நடக்கிறது.
Summary: OYO Rooms is facing serious allegations of fraud, with reports indicating a 22 crore rupee scam involving false bookings and financial irregularities. Hotel owners in Rajasthan have filed complaints, raising concerns about the company’s practices.