பங்குனி உத்திரம் 2025 : தமிழகத்தில் இருக்கும் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!
பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் புனித நாளாகும். இது முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.
பக்தர்கள் இந்நாளில் விரதமிருந்து, பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுவது வழக்கமாகும்.
பங்குனி உத்திரம் ரொம்ப விசேஷமான நாள். சிவன்-பார்வதி, முருகன்-தெய்வானை, ராமர்-சீதைன்னு பல கடவுள்களோட கல்யாணம் இந்த நாள்லதான் நடந்ததாம்.
சைவர்களுக்கு மட்டுமில்லாம, வைணவர்களுக்கும் இது முக்கியமான நாள். முக்கியமா, இந்த நாள்ல விரதம் இருந்து கும்பிட்டா கல்யாணத் தடை எல்லாம் நீங்கி நல்ல வரன் கிடைக்கும்னு நம்புறாங்க.