You are currently viewing நாவூறும் சுவையில் பட்டினப்பாக்கம் மீன் வறுவல் – எளிய முறையில் செய்வது எப்படி?

நாவூறும் சுவையில் பட்டினப்பாக்கம் மீன் வறுவல் – எளிய முறையில் செய்வது எப்படி?

0
0

மீன் பிரியர்களுக்கான சுவையான உணவு என்று சொன்னால், மீன் வறுவல் தான் முதல் தேர்வு. காலை, மதியம், இரவு என எப்போது வேண்டுமானாலும் மசாலா மாறி மாறி செய்தால் மீன் உண்பதில் ஒருபோதும் சலிப்பே இருக்காது.
அந்த வகையில், பட்டினப்பாக்கம் ஸ்டைல் மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மீன் – 2 துண்டு
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மல்லி – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் – 3
கடலை மாவு – 1 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை மெரினேட் செய்யவும்

கழுவிய மீன் துண்டுகளில்
மிளகாய் தூள்
உப்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தடவி விடவும்.
1 மணி நேரம் மூடி வைத்துப் பருமபட செய்யுங்கள்.

மசாலா பொடி தயாரிக்கவும்

மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்:
மல்லி
சீரகம்
சோம்பு
மிளகு
காஷ்மீரி மிளகாய்
கடலை மாவு
அரிசி மாவு
மஞ்சள் தூள்
நன்றாக பொடியாக அரைத்து எடுக்கவும்.

மீனை பிரட்டி வறுக்கவும்

ஊறவைத்த மீனை இந்த மசாலா பொடியுடன் சேர்த்து நன்றாக படிந்து விடும்படி பிரட்டி விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் மீன் துண்டுகளை பொறித்து எடுக்கவும்.
அதிரடி சுவையில் பட்டினப்பாக்கம் ஸ்டைல் மீன் வறுவல் ரெடி.

சிறந்த பரிமாறும் யோசனைகள்:

சுடு சாதம் & ரசத்துடன் சூப்பர்.
சிக்கன் பிரியாணியுடன் உன்னதமான இணை.
புடலங்காய் கூட்டு, தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.

இந்த எளிய முறையில் செய்து, உங்கள் வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.

Leave a Reply