வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரி டிசம்பர் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பா.ம.க-வின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறவழிப் போராட்டம், டிசம்பர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தகவலை பா.ம.க நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, ஒவ்வொரு சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவரை இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் கோரிக்கையுடன், முன்பு டிசம்பர் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த அறவழிப் போராட்டம் தற்போது டிசம்பர் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக சிறப்பாக நடைபெறும். இதற்காக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் செயல்வீரர் கூட்டங்கள் நடத்தி, பிரச்சாரம் செய்து சமூக நீதிக்கான இந்த அறவழி போராட்டத்தை மாபெரும் வெற்றியாக்க அனைவரும் ஒன்றிணைந்து தேனீக்களைப் போலச் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும்,” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Summary :
PMK leader Dr. Ramadoss announced the postponement of the protest seeking 10.5% Vanniyar reservation to Dec 12, urging unity for social justice.








