தொடர்ந்து வன்மமாக பேசும் பொன்முடி; அமைச்சர் பதவியும் பறிப்பா.? வெளியாகுப்போகும் அறிவிப்பு!!
பொன்முடி vs திமுக:
திமுகவின் முக்கிய புள்ளியாக இருக்கும் பொன்முடி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். சமீபத்தில், தமிழக அரசின் மகத்தான திட்டமான மகளிர் விடியல் திட்டத்தை “ஓசி டிக்கெட்” என்று தரக்குறைவாக விமர்சித்தார்.
மேலும், அரசு விழா ஒன்றில் ஊராட்சி மன்ற தலைவியின் ஜாதியைக் குறிப்பிட்டு பேசியது கண்டனத்திற்குள்ளானது. இந்த செயல்கள் திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன.
பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்கிறது. கோரிக்கை மனுவுடன் சென்ற பெண்களிடம் “எனக்கு ஓட்டு போட்டீங்களா?” என்று அவர் கோபமாக கேட்டது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கியும் பொன்முடி மீது திமுக தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், ஸ்டாலின் பலமுறை பொன்முடிக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
கட்சிப் பதவியிலிருந்து பொன்முடி அதிரடி நீக்கம் :
நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியது பெரும் புயலைக் கிளப்பியது.
சைவம் மற்றும் வைணவம் ஆகிய சமயங்களின் அடையாளங்களை அவர் தவறாக ஒப்பிட்டுப் பேசியது கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.
குறிப்பாக பெண்கள் மத்தியில் அவர் பேசிய சில கருத்துக்கள் கடும் கண்டனத்தைப் பெற்றன. திமுகவின் முக்கிய நிர்வாகியான கனிமொழி உட்பட பலரும் பொன்முடியின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
இதன் விளைவாக, அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்முடியின் அமைச்சர் பதவி காலி ஆகிறது. இதனால, அவரு அமைச்சர் பதவியில இருந்து தூக்கப்படலாம்னு சொல்றாங்க. திமுக வெளியிட்ட அறிக்கையில ‘அமைச்சர்’னு சொல்லவே இல்லையாம். முதலமைச்சர் ஸ்டாலின் பொன்முடிய நீக்க சொல்லி கவர்னருக்கு ரிப்போர்ட் அனுப்பிட்டாராம்.