சென்னை: பாதுகாப்பான சேமிப்பு மற்றும் நம்பகமான வருமானத்துக்கான சிறந்த தேர்வாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் எப்போதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது — “கிராம் சுரக்ஷா யோஜனா” (Gram Suraksha Yojana).
இந்த திட்டம், தினமும் வெறும் ரூ.50 முதலீடு செய்தாலே, முதிர்வுக் காலத்தில் அதிகபட்சம் ரூ.35 லட்சம் வரை வருமானம் தரக்கூடிய அஞ்சல் சேமிப்பு திட்டமாகும். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இந்த திட்டம், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
கிராம் சுரக்ஷா யோஜனாவின் சிறப்பம்சங்கள்
முதலீடு தொடங்கும் வயது: 19 முதல் 55 வயது வரை. குறைந்தபட்ச காப்பீட்டு தொகை: ரூ.10,000. அதிகபட்ச காப்பீட்டு தொகை: ரூ.10 லட்சம். பிரீமியம் செலுத்தும் விருப்பங்கள்: மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை. திட்ட காலம்: 55, 58 அல்லது 60 ஆண்டுகள்
மாதாந்திர முதலீடு & லாபம் உதாரணமாக, ஒருவர் 19 வயதில் ரூ.10 லட்சம் பாலிசி எடுத்தால்:
55 வருடங்களுக்கு மாதம் ரூ.1,515.
58 வருடங்களுக்கு மாதம் ரூ.1,463
60 வருடங்களுக்கு மாதம் ரூ.1,411
முதிர்வு காலத்தில்:
55 வருடத்திற்கு ரூ.31.6 லட்சம்
58 வருடத்திற்கு ரூ.33.4 லட்சம்
60 வருடத்திற்கு ரூ.34.6 லட்சம் வரை பெறலாம்.
மொத்தமாக, 80 வயதில் ரூ.35 லட்சம் வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
கூடுதல் நன்மைகள்
கடன் வசதி: 4 ஆண்டுகள் கழித்து கிடைக்கும்
போனஸ் வசதி: 5 ஆண்டுகள் கழித்து வழங்கப்படும்
சரண்டர் (விலகும்) வாய்ப்பு: பாலிசி தொடங்கிய 3 ஆண்டுகளுக்குப் பிறகு
கிராமப்புற மக்களுக்கான சிறப்பு திட்டம்
“கிராம் சுரக்ஷா யோஜனா” என்பது கிராமப்புற மக்களுக்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பான சேமிப்பு மற்றும் காப்பீட்டு திட்டம். இதன் மூலம் மக்கள் நீண்டகால நிதி பாதுகாப்பையும், உறுதியான வருமானத்தையும் பெற முடியும்.
அதனால்தான், இது அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் மிகவும் பிரபலமானதாக மாறியுள்ளது.