பி.ஆர். பாண்டியன் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு: சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

361.jpg

2015ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் பொதுச் சொத்துகள் சேதமானதாக கூறி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் செல்வராஜ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, அண்மையில் இருவருக்கும் தலா 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பின் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை ரத்து செய்யவும், தங்களுக்கு ஜாமீன் வழங்கவும் கோரி, பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பி.ஆர். பாண்டியனுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது, விவசாயி அமைப்புகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Summary :

PR Pandian and Selvaraj move the Madras High Court seeking bail and reversal of the 13-year jail term issued in the 2015 ONGC protest case.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *