You are currently viewing Priyanka Vasi Wedding | பிரியங்கா-ரகசிய திருமணம்!

Priyanka Vasi Wedding | பிரியங்கா-ரகசிய திருமணம்!

0
0

நரைத்த முடி; பிரியங்காவின் 2வது கணவர் வயதானவரா? இருவரின் வயசு வித்தியாசம் என்ன? – Priyanka Vasi Wedding

Priyanka Vasi Wedding – விஜய் தொலைக்காட்சியின் மூலம் தமிழ் இல்லங்களில் நீங்கா இடம்பிடித்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. “சூப்பர் சிங்கர்”, “ஊ சொல்றியா ஊஊ சொல்றியா”, “ஸ்டார்ட் மியூசிக்” போன்ற பல வெற்றி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

மேலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் தனது தனித்துவமான ஆளுமையால் இறுதி வரை சென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பிக்பாஸ் வெற்றி மகுடம் சூட முடியாவிட்டாலும், சமையல் களத்தில் தனது திறமையை நிரூபித்து “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த பிரியங்கா தேஷ்பாண்டே, 2016-ம் ஆண்டு தனது சக பணியாளர் பிரவீனை காதலித்து மணந்தார்.

திரையில் இனிய ஜோடியாக வலம் வந்த இவர்களது இல்லற வாழ்க்கை, எதிர்பாராத விதமாக ஆறு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

2022-ல் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் அமைதியாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை பிரியங்கா இதுவரை வெளி உலகிற்கு தெரியப்படுத்தாமல் ரகசியமாக வைத்திருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திடீர் திருப்பம்! இரண்டாவது வாழ்க்கையைத் தொடங்கிய விஜே பிரியங்கா!

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அவர் டிஜே வசி என்பவரை தனது வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டுள்ளார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மிகவும் ரகசியமாக இந்த திருமணத்தை பிரியங்கா முடித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான நிகழ்வில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவனி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

பிரியங்கா தேஷ்பாண்டேவின் இந்த திடீர் திருமணம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யார் இந்த வசீகரன் வசீ? பிரியங்காவின் இதயத்தை கவர்ந்த டிஜே!

பிரியங்கா தேஷ்பாண்டேவை மணந்த டிஜே வசி சச்சி ஒரு பிரபலமான டிஜே மற்றும் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாற, இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

பிரியங்கா தேஷ்பாண்டேவின் கணவர் வசியின் வயது குறித்த ஆர்வம் நிலவிய நிலையில், அவரது தற்போதைய வயது 42 என தெரிய வந்துள்ளது.

பிரியங்காவின் வயது 32 என்பதால், இருவரும் 10 வயது வித்தியாசம் கொண்டவர்கள் என்ற தகவல் இணையத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி, பேசுபொருளாக மாறியுள்ளது.

Summary :

Popular Tamil television host Priyanka Deshpande has unexpectedly remarried DJ Vasi (Vasigaran Vasi Sachi) in a secret ceremony attended by Bigg Boss fame Amir and Pavani.

This marks her second marriage following a quiet divorce from her first husband, Praveen, in 2022 after six years of marriage.

DJ Vasi is a well-known DJ and owner of an event management company. The news has sparked interest online, particularly regarding the 10-year age difference between Priyanka (32) and her 42-year-old husband, DJ Vasi.

Leave a Reply