புதுச்சேரி :
பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்தே மது வகைகளுக்குப் பெயர் பெற்றது. குறைந்த விலைகள், பலவிதமான மது வகைகள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் ஆகியவை மது பிரியர்களை புதுச்சேரியை நோக்கி ஈர்க்கின்றன. புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன.
ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டெக்யுலா போன்ற 1000-க்கும் மேற்பட்ட பல்வேறு பிராண்ட் மது வகைகள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகின்றன. புதுச்சேரியில் கிடைக்கும் மது வகைகளை ருசி பார்க்க நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
புதுவையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளின் 35 வகையான பீர் வகைகள் முழு பாட்டில்களில் கிடைக்கின்றன. டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் சிறிய அளவுகளில் பீர் கிடைக்கிறது.
கோடை காலம் தொடங்கியவுடன், வெப்பம் மற்றும் வறட்சியிலிருந்து தப்பிக்க மது பிரியர்கள் பீர் அருந்துவதை விரும்புகின்றனர். புதுவையில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர். சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.”
Summary:Puducherry, known for its affordable and diverse range of alcoholic beverages since French rule, attracts liquor enthusiasts with over 400 shops offering 1000+ brands, including a variety of beers from countries like Australia and New Zealand. The increasing heat of summer has boosted beer demand, leading to shortages of chilled beer in some stores due to insufficient coolers.