புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களுக்காக, தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
வருகிற அக்டோபர் 20 (திங்கள்கிழமை) அன்று நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அரசு முன்பே விடுமுறை அறிவித்திருந்தது. இதனுடன், மேலும் ஒரு நாள் (அக்டோபர் 21, செவ்வாய்) அரசு விடுமுறை வழங்கப்படுவதால் மகிழ்ச்சி நிலவுகிறது.
அறிவிப்பின்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அக்டோபர் 21 அன்று மூடப்பட்டிருக்கும். இதற்கான ஈடுசெய்யும் நாள் நவம்பர் 15 (சனிக்கிழமை) என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் இதேபோல் தீபாவளி மறுநாளும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இரு நாள் தொடர்ச்சியான விடுமுறையால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Summary :
Puducherry government declares Oct 21 holiday after Diwali for schools and offices, delighting students and employees across the region.