புதுச்சேரி: தீபாவளி பரிசுத் தொகுப்பில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஆளுநர் கைலாஷ்நாதனின் புகைப்படம் இல்லாததால் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது.
வருகிற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி அரசு ரேஷன்கார்டு தாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்குகிறது. இதில் சர்க்கரை, சூரியகாந்தி எண்ணெய், கடலை பருப்பு, ரவை, மைதா உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.585 ஆகும்.
தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திலாஸ்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு முதல் தொகுப்பை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய ரங்கசாமி, “அரசின் அனைத்து திட்டங்களும் நடைமுறைக்கு வருகிறன. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000, கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.5,000, மூத்த குடிமக்களுக்கு ரூ.6,000 என நிதி வழங்கப்படும். பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினால் அவை மூடப்படும் நிலை உருவாகும்,” என்றார்.
பொதுவாக, அரசின் திட்டங்களில் ஆளுநரின் புகைப்படமும் இடம்பெறும். ஆனால், இந்த முறை தீபாவளி தொகுப்புப் பையில் ஆளுநர் கைலாஷ்நாதனின் படம் நீக்கப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது. முதலமைச்சர்–ஆளுநர் உறவில் ஏற்பட்ட பிரச்சனையின் விளைவாக இதை சிலர் கருதுகின்றனர்.
Summary :
Puducherry’s Diwali kit shows Modi and CM Rangasamy but excludes Governor Kailashnathan, leading to political tension and public debate.