புதுச்சேரி மின்வாரிய அறிவிப்பின்படி, இன்று (07.11.2025) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக சில பகுதிகளில் மின்தடை அமல்படுத்தப்படுகிறது.

மாதந்திர பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட மின் பாதைகள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்:
குரும்பாபேட் மின்பாதை பகுதிகள்
குரும்பாபேட் தொழிற்பேட்டை, ராகவேந்திரா நகர், அமைதி நகர், அய்யங்குட்டிபாளையம், கல்மேடுபேட், காந்தி திருநள்ளுர், வள்ளலார் நகர், வழுதாவூர் ரோடு உள்ளிட்ட பகுதிகள்.
புதிய ஜிப்மர் மின்பாதை
அரசு செயலர் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை, கோரிமேடு வணிக வளாகம், மதர்தெரசா நர்சிங் கல்லூரி, தொலைக்காட்சி நிலையம்.
மூலக்குளம் மின்பாதை
ராம் நகர், மாணிக்கசெட்டியார் நகர், மீனாட்சிபேட், பாரதிபுரம், சத்தியமூர்த்தி நகர், அம்பாள் நகர், கவுண்டன்பாளையம், தந்தை பெரியார் நகர், குமரன் நகர், சக்தி நகர் உள்ளிட்டவை.
லாஸ்பேட் மின்பாதை
மேட்டுப்பாளையம் டிரக் முனையம், காமராஜ் நகர், லாஸ்பேட், நாவற்குளம், அன்னிபெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அவ்வை நகர், வள்ளலார் நகர், லஷ்மி நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு உள்ளிட்டவை.
மின்சாரம் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் வழக்கம்போல மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
Summary :
Power supply will be suspended in parts of Puducherry today (07.11.2025) from 10 AM to 3 PM for maintenance. Check full list of affected areas.








