9, 11ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுத்தேர்வு அறிவிப்பு
பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினியின் ஆணைப்படி, புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இணை இயக்குநர் சிவகாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு கூறுகிறது:
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே 9 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை நிறுத்துவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணையின்படி மறுதேர்வு நடத்தி மற்றொரு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மறுதேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர், அவர்கள் தோல்வியடைந்த பாடங்கள் மற்றும் மறுதேர்வுக்கான நேர அட்டவணை ஆகியவற்றை பள்ளி அறிவிப்புப் பலகையில் கட்டாயம் ஒட்ட வேண்டும்.
அனைத்து பாடங்களிலும் 33 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது அடுத்த வகுப்பிற்கு பதவி உயர்வு பெற்றவர்களாகவோ அறிவிக்கப்படுவார்கள்.
9 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 10-ஆம் தேதி மொழிப் பாடத்திற்கும்,
11-ஆம் தேதி ஆங்கிலப் பாடத்திற்கும்,
15-ஆம் தேதி கணிதப் பாடத்திற்கும்,
16-ஆம் தேதி அறிவியல் பாடத்திற்கும்,
17-ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கும் மறுதேர்வு நடத்தப்படவுள்ளது.
இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
7ஆம் தேதி மொழிப்பாடம் மற்றும் உளவியல் தேர்வும்,
8ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெறும்
9ஆம் தேதி வெப் அப்ளிகேஷன்,
10ஆம் தேதி கணினி அறிவியல் தேர்வும் நடைபெற உள்ளது,
11ஆம் தேதி உயிரியல், வணிகவியல், ஜவுளி வடிவமைப்பு, குளிர்சாதனவியல், புவியியல், ஓவியம் ஆகிய பாடங்களுக்கான மறுதேர்வு நடத்தப்படும்,
15ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், அச்சுக்கலை, கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கான தேர்வும்,
16ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், மனையியல், மின் தொழில்நுட்பம், மின்னணுவியல் தொழில்நுட்பம், தானியங்கி ஊர்தியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வும் நடைபெறும். இறுதியாக,
17ஆம் தேதி கணிதம், தகவல் தொழில்நுட்பம், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான மறுதேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.