குளிர்காலம் வருவதால் வெல்லத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மார்க்கெட்டில் கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் அதிகமாக விற்பனை செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே வெல்லம் சுத்தமானதா, போலியானதா என்பதை சில எளிய சோதனைகளின் மூலம் வீட்டிலிருந்தபடியே கண்டறியலாம்.

இப்போது அந்த 5 எளிய வழிகளை பார்க்கலாம்
நிறம் மற்றும் அமைப்பு:
தூய்மையான வெல்லம் ஆழமான தங்கம் அல்லது பழுப்பு நிறத்துடன், இயற்கையான மென்மையைக் கொண்டிருக்கும். ஆனால் கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் பளபளப்பாகவும், அதிக மினுமினுப்பாகவும் காணப்படும்.
தொடுதல் சோதனை:
சுத்தமான வெல்லம் லேசாக ஒட்டும் தன்மையுடனும், இயற்கையான எண்ணெய் பிசுபிசுப்புடனும் இருக்கும். போலியான வெல்லம் கடினமாகவும் உலர்ந்த நிலையிலும் இருக்கும்.
வாசனை மற்றும் சுவை:
தூய்மையான வெல்லத்தில் இயற்கையான மண்வாசனை மற்றும் இனிப்பு-கசப்பு கலந்த சுவை இருக்கும். போலியான வெல்லத்தில் செயற்கை வாசனை மற்றும் அளவுக்கு மீறிய இனிப்பு இருக்கும்.
தண்ணீர் சோதனை:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிறு துண்டு வெல்லத்தை போடவும். சுத்தமான வெல்லம் மெதுவாக கரைந்து, தண்ணீரை லேசான பழுப்பு நிறமாக மாற்றும். போலியான வெல்லம் கரையாமல் தண்ணீரின் அடியில் கசடுகளாக காணப்படும்.
நெருப்பு சோதனை:
ஒரு சிறு துண்டு வெல்லத்தை ஸ்பூனில் வைத்து நெருப்பில் வைத்தால், தூய்மையான வெல்லம் புகையில்லாமல் உருகிவிடும். போலியான வெல்லம் கருமை நிற புகை மற்றும் கெமிக்கல் வாசனை வெளியிடும்.
வெல்லம் வாங்கும்போது எப்போதும் FSSAI முத்திரை, பேட்ச் நம்பர் மற்றும் உற்பத்தி தேதி உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள். நம்பகமான பிராண்டுகள் அல்லது ஆர்கானிக் கடைகளில் வாங்குவது ஆரோக்கியமான தேர்வாகும்.
Summary :
Learn 5 quick and easy ways to identify pure jaggery at home. Spot chemical-mixed or fake jaggery with simple color, water, and smell tests.









