ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் போஸ்ட் – பெரிய பூனையுடன் போட்டோஷூட்!

0572.jpg

நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். சமீபத்தில், பெரிய பூனை ஒன்றை கையில் தூக்கிக்கொண்டும், தோளில் வைத்து கொஞ்சியும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் “அத்தனை பெரிய பூனை!” என ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

கன்னடத்திலிருந்து தமிழ் சினிமா வரை…

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த ரச்சிதா, கன்னட சின்னத்திரையில் “மேக மண்டலா” தொடரில் அறிமுகமானார். பின்னர், 2011ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார். 2013ம் ஆண்டு “சரவணன் மீனாட்சி” தொடரில் நடித்து, மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் போட்டியாளர் முதல் ஹீரோயின் வரை

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளராக பங்கேற்ற ரச்சிதா, அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகளை பெறத் தொடங்கினார். கன்னடத்தில் “கனி”, “பாரிஜாதா” போன்ற படங்களில் நடித்த இவர், தமிழில் “உப்பு கருவாடு” படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
அண்மையில், “ஃபயர்” படத்தில் நடித்திருந்தார். காதலர் தினத்துக்கு வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

பெரிய பூனை – வைரலாகும் புகைப்படம்!

“ஃபயர்” பட வெற்றிக்குப் பிறகு, “மெய் நிகரே”, “யு ஆர் நெக்ஸ்ட்” உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில், பெரிய பூனை ஒன்றை கையில் தூக்கி கொஞ்சிக் கொண்டும், முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
“மாஸ்டர்” படத்தில் விஜய் பறவையுடன் இருந்ததைப் போல, பெரிய பூனைக்கு முத்தம் கொடுத்த ரச்சிதாவின் புகைப்படங்கள், ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. “அத்தனை பெரிய பூனை எங்கே கிடைச்சது?” என கமெண்டுகள் குவிந்து வருகின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *