மழை திரும்பி வந்தது – இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Heavy Rain

காலையிலே வானம் சற்று மந்தமாகவும், மேகங்கள் நிறைந்ததாகவும் இருந்தால்,  மக்களுக்கு உடனே மனசுல — மழை வரப்போறதா ,ஐயோ துணி துவைக்கணும் ,ஆபீஸ் போணுமா, ஸ்கூல்க்கு leave விடுவாங்களா என்று தோணும்.

இப்போ அந்தக் கேள்விக்கு வானிலை மையம் (IMD) இருந்து நேரடி பதில். ஆம் — இன்று                  11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக மத்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருக்கிறது.

எங்கெல்லாம் மழை பெய்யும் ?

வானிலை மையத்தின் புதிய அறிக்கையின்படி,
இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில்
மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD தகவல். சென்னையில் காலை முதல் சூரியன் மழை மாறிமாறி விளையாடிக் கொண்டிருக்கிறது  “மழை வருமா வராதா?” என்ற குழப்பம் நாள் முழுக்க தொடரும் போல.

ஏன் இந்த மழை?

இந்த மழைக்கு காரணம் பாயும் காற்றழுத்த மாற்றம் மற்றும் கிழக்குக் கடலில் உருவான (Humidity micro pressure)
ஈரப்பத நுண்ணழுத்தம் தான். கடல் பகுதியில் உருவாகும் low-pressure zone, தமிழகத்தின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு மேகங்களை இழுத்து வருது. அதனால தான் இடைக்கிடை மழை, சில நேரம் கனமழை மாதிரி pattern இருக்கு.

மழை எப்போது வரலாம்?

வானிலை மையம் கூறியிருப்பது போல,

மதியம் முதல் இரவு வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மதியம்: மேகமூட்டத்துடன் மிதமான மழை

மாலை: இடியுடன் கூடிய கனமழை

இரவு: சில இடங்களில் தீவிர மழை வாய்ப்பு

காலை நேரத்துக்கு பிறகு , coastal பகுதிகள் (சென்னை, மாமல்லபுரம், கடலூர்) பகுதியில் thunder activity அதிகரிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

வானிலை மைய எச்சரிக்கை:

வானிலை மையம் சில முக்கிய ஆலோசனைகள் :

  • கடற்கரைக்கு அருகே வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்
  • தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம்
  • மின்கம்பிகள் அருகே நிற்க வேண்டாம்
  • நீரேறும் சாலைகளில் வாகன ஓட்டம் கவனமாக செய்யவும்
  • பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான வழிகள் பின்பற்றவும்

கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கை:

மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்களுக்கு இது முக்கியம். கடலோர மாவட்டங்களுக்கு wind speed 45–55 kmph வரை அடிக்க வாய்ப்புள்ளதாகவும், கடலுக்குள் செல்வது ஆபத்தானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை பகுதிகளில் கடல் அலைகள் 1.5 மீட்டர் வரை உயரமா இருக்கலாம். அதனால் fishermen communityக்கு இது ஒரு temporary restriction period குடுத்துருக்காங்க .

வானிலை முன்னறிவிப்பு – அடுத்த சில நாட்கள்:

மத்திய வானிலை ஆய்வு மையத்தின் படி,
அடுத்த 3 நாட்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் scattered rainfall இருக்கும்.

செவ்வாய், புதன்: தென் மாவட்டங்களில் மிதமான மழை

வியாழன், வெள்ளி: வடக்கு மற்றும் கடலோர பகுதிகளில் கனமழை

அதற்குப்பிறகு வானம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary:

The Indian Meteorological Department has issued a heavy rain alert for 11 districts in Tamil Nadu. Thunderstorms and strong winds are likely in coastal areas. Officials advise people to stay indoors and avoid unnecessary travel.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *