எதிர்பாராத விபரீதம்: ஒரு உயிர் பறிபோன சோகம்

Two SchoolBoys are met accident
0
0

ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரு 17 வயது இளைஞர்கள், பிளஸ்-2 தேர்வு முடிந்த கையோடு மது அருந்தும் எண்ணத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தனர்.

Tardigrade or Water Bear

“வெப்பம், குளிர், பேரழிவுகளையும் வெல்லும் நீர்க்கரடி!”

சமீபத்திய செய்தி!!!

மதுபாட்டில்களை உடலோடு ஒட்டி எடுத்துச் சென்ற நிலையில், தொருவளூர் அருகே எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் இருவரும் நிலை குலைந்து விழுந்தனர்.

மோதலின் தாக்கத்தில், பின்னால் இருந்த மாணவன் வயிற்றோடு வைத்திருந்த மதுபாட்டில்கள் நொறுங்கி வயிற்றை பதம் பார்த்தன. ரத்தப்பெருக்கில் துடித்த அவனை கண்டதும் பதறிய அக்கம் பக்கத்தினர் விரைந்து உதவினர்.

படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவன் வழியிலேயே உயிர் துறந்தான். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Summary:Two 17-year-old boys from Ramanathapuram, traveling to drink alcohol after their exams, were involved in an accident on the East Coast Road. One boy died on the way to the hospital after liquor bottles he was carrying shattered upon impact, severely injuring his abdomen. The other boy is critically injured. Police are investigating the incident.

scroll to top