RBI Action – ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
RBI Action – பொதுவாக வங்கி தானியங்கிப் பணம் வழங்கும் இயந்திரங்களில் (ஏ.டி.எம்.) அதிகளவில் 500 ரூபாய் தாள்களே வைக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, பொதுமக்கள் குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்காக சிரமப்பட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சிக்கல்களைக் களைவதற்காக, வங்கி ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் இருப்பை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கும் ஏ.டி.எம். சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அன்றாடப் பயன்பாட்டிற்கு அவசியமான குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் பொதுமக்களுக்கு தாராளமாகக் கிடைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது .
அனைத்து ஏ.டி.எம்.களிலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை ஒரு வழக்கமான நடைமுறையாக உறுதி செய்ய வேண்டும்.
இந்த மாற்றத்தை படிப்படியாக செயல்படுத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் குறைந்தது 75 சதவீத ஏ.டி.எம்.களில், குறைந்தபட்சம் ஒரு பணப்பெட்டியிலாவது மேற்குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து ஏ.டி.எம்.களிலும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1.பொதுமக்களின் அதிருப்தி: ஏடிஎம் என்பது பணத்தை எளிதாக எடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சேவை.
ஆனால் அதில் குறைந்த மதிப்பு நோட்டுகள் இல்லாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
தங்கள் தேவைக்கேற்ப பணத்தை எடுக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்த பிரச்னைகளை ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவுறுத்தல் மூலம் சரிசெய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏடிஎம்-களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் இருந்தால், பொதுமக்களின் அன்றாட பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
Summary: The Reserve Bank of India (RBI) has instructed banks and ATM service providers to maintain a regular supply of ₹100 and ₹200 currency notes in Automated Teller Machines (ATMs).
This move aims to address the inconvenience faced by the public due to the predominant availability of ₹500 notes.
The RBI’s directive mandates that at least 75% of ATMs should have at least one cassette loaded with these smaller denomination notes by September 30th of this year, with full implementation across all ATMs targeted by March 31st of next year.