பிக்பாஸ் 9 வீட்டில் கலகலப்பு: ஜெயிலில் வியானா–வினோத் ரொமான்ஸ்!

058.jpg

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் தமிழ் தற்போது ஒன்பதாவது சீசனில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தினந்தோறும் நடக்கும் தகராறுகள், உணர்ச்சி வெடிப்புகள் காரணமாக, வீடு முழுவதும் சர்ச்சையால் சூழ்ந்துள்ளது.

இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். முதல் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், புதிய தொகுப்பாளர் வருகையால் ரசிகர்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.

இந்த சீசனில் திவாகர், கலையரசன், வி.ஜே. பார்வதி, ரம்யா ஜோ, அரோரா, ஆதிரை, கம்ருதீன், கெமி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடக்கம் முதலே போட்டியாளர்களுக்குள் மோதல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீடு மேலும் சூடுபிடித்துள்ளது. இன்று வெளியான புரொமோவில், வியானா மற்றும் வினோத் இருவரும் “வீட்டில் இருக்க தகுதியில்லாதவர்கள்” என தீர்மானிக்கப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில், வினோத் “பாசமலர்” படத்தின் பிரபலமான பாடல் ‘மலர்ந்தும் மலராதா பாதி மலர் போல…’ பாடலைப் பாடி, வியானாவுக்கு உணவு ஊட்டும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

இதேசமயம், போட்டியாளர் நந்தினி தன்னால் “இந்த பொய்மையான சூழலில் இருக்க முடியாது” என்று கூறி, எவிக்‌ஷனுக்கு முன்பே வெளியேறியதாக தெரிகிறது.

புரொமோ வெளியாகிய சில மணி நேரங்களுக்குள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலந்துரையாடல் வெடித்துள்ளது. “பிக்பாஸ் ஜெயிலே ரொமான்ஸ் ஜோன் ஆகிடுச்சா?” என மீம்களும் பரவி வருகின்றன.

Summary:
In Bigg Boss Tamil Season 9, tensions continue to rise inside the house. In the latest promo, contestants Vianna and Vinoth are sent to jail after being declared “unfit” to stay in the house.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *