புதுச்சேரியில் ருவாண்டா மாணவர் கைது; திருச்சி சிறப்பு முகாமிற்கு மாற்றம்

240.jpg

விசா காலம் முடிந்தும் புதுச்சேரியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த ருவாண்டா நாட்டு மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்து, திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் ருவாண்டாவைச் சேர்ந்த சேமா மன்சி பபரீஷ் (35). இவர் 2015ஆம் ஆண்டு மேற்படிப்பிற்காக இந்தியா வந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பின் புதுச்சேரி–ஆரோவில் பகுதிகளில் தங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு வழங்கப்பட்ட மாணவர் விசா 27 அக்டோபர் 2025 அன்று காலாவதியானது. விசா புதுப்பிக்காமல் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கி இருந்ததால், புதுவை வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரிகள் அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், கோட்டக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட ‘செல்வசி பீச் காட்டேஜ் ஆரோபீச்’ எனும் விடுதியில் அவர் தங்கியிருப்பது கண்டறியப்பட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும், அவர் படித்த காலத்தில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் இரண்டு குற்ற வழக்குகள் பதிவாகியிருந்தது. அதில் ஒன்றின் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த சூழலில், வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி அருண்சக்திகுமார், Immigration and Foreigners Act பிரிவுகளின் கீழ் ‘நகர்வு கட்டுப்பாடு ஆணை’ பிறப்பித்து, அவரை திருச்சி சிறப்பு முகாமிற்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டார்.

அதன்படி, அதிகாரிகள் அவரை கோட்டக்குப்பம் போலீசில் ஒப்படைத்து, கடுமையான பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெறும் விசாரணைக்குப் பின், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ருவாண்டா தூதரகத்தின் அனுமதியுடன் அவர் நாடு கடத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary (150 chars)

A Rwandan student overstaying his visa was arrested in Puducherry and shifted to the Trichy detention camp, where deportation procedures will follow.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *