கும்பகோணம்: பலர் வாழ்க்கையில் எதிர்பாராத சிக்கல்களை சந்தித்தால், “எல்லாம் என் தலையெழுத்து!” என்று மனமுடைந்து விடுவார்கள். ஆனால் திருபுவனம் சரபேஸ்வரர் மீது பக்தியுடன் வழிபட்டால், உங்கள் விதியையே மாற்ற முடியும் என நம்பப்படுகிறது.
“சரபேஸ்வரர் – உங்களின் சிக்கலை தீர்க்கும் தெய்வம்!”
தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்திற்கு அருகே திருபுவனம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கம்பகரேஸ்வரர் (சரபேஸ்வரர்) கோவில் பக்தர்களிடம் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளது.
சரபேஸ்வரர் என்பது சிவபெருமானின் ஒரு விசேஷமான அவதாரம். நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யகசிபுவை அழித்த பிறகு, அவரின் உக்கிரம் அடங்காமல் திமிறிக்கொண்டே இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அந்த உக்கிரத்தை அடக்கவே சிவபெருமான் சரபேஸ்வரராக தோன்றி, உலகிற்கு சமாதானம் அளித்தார்.
“சரபேஸ்வரரின் அற்புதமான வடிவம்”
சரபேஸ்வரரின் உருவம் மிகவும் விசித்திரமானது.
மனிதன், பறவை, மிருகம் ஆகிய மூன்றின் கலவை
தங்க நிற பறவை உடல் மற்றும் விசாலமான இறக்கைகள்
நான்கு கால்கள் மேலே, நான்கு கால்கள் கீழே
சிங்க முகம், தெய்வீக மனிதத் தலம்
நெற்றிக்கண் – அதிலிருந்தே பிரத்யங்கிரா தேவி தோன்றியதாக புராணக் கதைகள் கூறுகின்றன.
சரபேஸ்வரரின் சக்திகளாக ப்ரத்யங்கிரா தேவி மற்றும் சூலினி துர்கை விளங்குகின்றனர்.
ப்ரத்யங்கிரா தேவி – எதிரிகளை அழிக்கும் சக்தி
சூலினி துர்கை – அனைத்து துன்பங்களையும் தூர செய்யும் சக்தி
“எந்த விதியையும் மாற்றும் சரபேஸ்வர வழிபாடு!”
சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் (மாலை 4.30 – 6.00) வழிபடுவது சிறப்பு.
இந்த வழிபாடு மூலமாக:
பில்லி, சூனியம், ஏவல் போன்ற எதிர்மறை சக்திகளிலிருந்து விடுபடலாம்.
தீராத நோய்களிலிருந்து குணமடையலாம்.
வாழ்க்கையில் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம்.
தலைவிதியை மாற்றும் சக்தி கிடைக்கும்!
“வாழ்க்கையை மாற்ற, சரபேஸ்வரரை வழிபடுங்கள்!”
திருபுவனம் சரபேஸ்வரர் கோவில், தலையெழுத்தை மாற்றும் சக்தி பெற்ற தெய்வமாக நம்பப்படுகிறது. வாழ்க்கையில் வெற்றியை தேடும் அனைவரும் அவரை ஆராதித்தால், அனைத்து குறைகள் நீங்கி, வாழ்வு சிறக்கும்.