சர்தார் 2″ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில், நடிகர் கார்த்தி பேசியபோது, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் ஒரு மிரட்டலான விஷயத்தை படத்தில் வைத்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
2022-ல் நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதன் முன்னோட்ட வீடியோ வெளியீட்டு விழா வடபழனியில் நடைபெற்றது.
இதில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை மாளவிகா மோகனன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., இயக்குநர் பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “ஹாலிவுட் பாணியிலான ஸ்பை திரைப்படத்தை மித்ரன் நம் ஊர் ரசிகர்களுக்குப் புரியும் வகையில் சுவாரஸ்யமாக உருவாக்கி இருக்கிறார். கார்த்தி மூளைக்கும் மனசுக்கும் ஃபில்டர் இல்லாதவர்” என்று குறிப்பிட்டார்.