மாத்திரைகளால் சர்க்கரை நோய் கட்டுப்படாத போது இன்சுலின் ஊசிக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஊசி என்றாலே பயப்படுவர்கள் தான் அதிகம். இதில் தினசரி தனக்கு தானே ஊசிக்குத்திக் கொள்ள ஆரம்பக்காலத்தில் பயமாக இருக்கும். பிறகு சர்வசாதாரணமாக ஆகிவிடும். இன்று மார்க்கெட்டில் வலியே தெரியாத அளவுக்கு விதவிதமாக ஊசிகள் கிடைக்கிறது. மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு ஊசி மருந்தை எடுக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. ஏனெனில் உயர்ந்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது எளிது.ஆனால் குறைந்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பது மிகவும் கடினம்.

ஊசிப்போடும் முன் கவனிக்க வேண்டியவை:
- முதலில் உங்கள் கைகளை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்து கொள்ளவும்.
- உங்கள் இன்சுலின் அளவுக்கு ஏற்ற சிரின்ஜைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதாவது 40 ஐ.யூ.இன்சுலினுக்கு 40 ஐ.யூ. சிரின்ஜ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- நீங்கள் கலங்கலான இன்சுலினைப் பயன்படுத்தினால், உள்ளே இருக்கும் வண்டல் முழுவதும் நன்கு கலக்கும் வரையில் பாட்டிலைக் கவிழ்த்துக் குலுக்கவும்.
- இன்சுலின் செலுத்த வேண்டிய அளவு வரை சிரின்ஜ் மூலம் பாட்டிலை நேராகப் பிடித்து காற்றை மெதுவாக உள்ளே செலுத்தவும்.
- தேவையான அளவு இன்சுலினை இழுக்கவும். காற்றுக் குமிழிகளைப் போக்க சிரின்ஜை மெதுவாகத் தட்டவும்.
- ஸ்பிரிட்டில் நனைத்த பச்சை ஊசி போட வேண்டிய இடத்தில் தடவவும்.
- ஊசி போட வேண்டிய இடத்தில் உள்ள தோலைப் பிடித்து அகலமான மடிப்பினுள் தோலின் அடியில் உள்ள அடுத்த திசுவிற்கு எதிராக 90 டிகிரி கோணத்தில் ஊசியைக் குத்தவும்.
- இன்சுலினை மெதுவாகச் செலுத்தவும் ஊசியை வெளியே எடுக்கும் பொழுது, அந்த இடத்தில் வேறொரு விரலால் அழுத்திக் கொண்டே எடுக்கவும்.
- தோலின் அடியில் உள்ள திசுவில் மாறுதல் வராமல் இருக்க ஊசி போடும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம்.
- தனது இஷ்டம் போல மருந்துகளின் அளவை கூட்டிக்குறைக்க கூடாது. அதன் பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
- இன்சுலின் மருந்துகளில் உங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகளை கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.
- இன்சுலின் மருந்துகளை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
- சிரிஞ்சில் உள்ள ஊசியை அடிக்கடி மாற்றவேண்டும்.
Summary :
This article explains how to safely self-inject insulin, step-by-step instructions, precautions, storage guidance, and essential tips for diabetes management.








