You are currently viewing இறால் நெய் ரோஸ்ட் – ஹோட்டல் ஸ்டைலில் செய்யலாமா?

இறால் நெய் ரோஸ்ட் – ஹோட்டல் ஸ்டைலில் செய்யலாமா?

0
0

உங்கள் வீட்டில் அடிக்கடி இறால் வாங்குவீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சமைப்பதை மாற்றி, ஹோட்டல் தரத்தில் ஒரு சுவையான இறால் நெய் ரோஸ்ட் செய்து பாருங்கள். ரசம் சாதத்துடன் சேர்த்தால் அதன் ருசி இன்னும் சிறப்பாக  இருக்கும்.
இந்த எளிய செய்முறையைப் படித்து செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

இறால் – ½ கிலோ
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
நெய் – ¼ கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கெட்டித் தயிர் – ¼ கப்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு:

வரமிளகாய் – 4
மல்லி, மிளகு, சோம்பு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்
இஞ்சி – 1 இன்ச்
பூண்டு – 3 பல்
தண்ணீர் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, அதை நீர் வற்றும் வரை வேக வைத்து வெறுமனே வைக்கவும்.
வாணலியில் வரமிளகாய் தனியாக வறுத்து எடுக்கவும். அதன் பிறகு மல்லி, மிளகு, சோம்பு, சீரகம் சேர்த்து வறுத்து, குளிர வைக்கவும்.
மிக்ஸியில் வறுத்த மசாலாக்களை, இஞ்சி, பூண்டு, எலுமிச்சைச் சாறு, 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி சூடானவுடன் வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் அரைத்த மசாலா, கெட்டித் தயிர் சேர்த்து, பச்சை வாசனை போக 10 நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக வேக வைத்த இறாலை சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலந்து 3 நிமிடம் ரோஸ்ட் செய்யவும்.சுவையான இறால் நெய் ரோஸ்ட் தயார்! இது சாதம், சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுடன் சிறப்பாக இருக்கும்.

சமைத்து பார்த்து, உங்கள் அனுபவத்தை பகிருங்கள்.

Leave a Reply