சென்னை:
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு (எஸ்.டிஆர்) நடிக்கும் புதிய படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தின் பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக ‘அரசன்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறனின் பிரபலமான வடசென்னை யுனிவர்ஸ் உலகில் உருவாகும் இப்படம் குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் “அரசன்” எனும் தலைப்பு வெளியாகியதும், சமூக வலைதளங்களில் “அரசனா? அசுரனா?” என ரசிகர்கள் மீம்ஸ் வெள்ளம் பாய்ச்சி வருகின்றனர்.
தனுஷின் ‘அசுரன்’ படத்தை நினைவூட்டும் இந்த தலைப்பு, சிம்புவின் படத்துக்கு அதே மாதிரி ஒலிக்கிறதென ரசிகர்கள் கலகலப்பாக கருத்து தெரிவிக்கின்றனர். “தனுஷுக்கு அசுரன்… சிம்புவுக்கு அரசன்… அடுத்தது என்ன?” என பலர் மீம்ஸ் பகிர்ந்து வருகிறார்கள்.
முன்னதாக வெற்றிமாறன் சூர்யாவுடன் ‘வாடிவாசல்’ படத்தைத் தொடங்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் நிறுத்தப்பட்ட நிலையில், புதிய கதை மூலம் சிம்புவுடன் இணைய முடிவு செய்துள்ளார்.
இப்படத்தில் அனிருத் இசையமைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சில ரசிகர்கள், “இது ஜிவி பிரகாஷ் அல்லது சந்தோஷ் நாராயணன் இசையாக இருந்தால் தான் செமையா பொருந்தும்” என கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது “அரசன்” எனும் தலைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
Summary:
Vetrimaaran’s upcoming film starring Simbu has been officially titled Arasan. Following the announcement, fans have flooded social media with memes jokingly asking, “Arasana or Asurana?” referencing Simbu’s film in comparison to Dhanush’s Asuran.