திருப்பதி கோவிலில் பக்தர்களின் செருப்புகளை பாதுகாக்க ஸ்கேனிங் முறை அறிமுகம் – Slipper Security
Slipper Security – திருமலையில் குடிகொண்டுள்ள ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்கள், தங்களது காலணிகளைப் பாதுகாப்பாக வைப்பதில் பெரும் இன்னல்களைச் சந்தித்து வந்தனர்.
பக்தர்களின் இந்த சிரமத்தைப் போக்கும் வகையில், திருப்பதி தேவஸ்தானம் அதிநவீன ரேடியோ அதிர்வெண் ஸ்கேனிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆரம்பகட்டமாக, ஏ.டி.சி.க்கு அருகிலுள்ள உடைமைகள் பாதுகாப்பு மையத்தில் இந்த புதிய முறை சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், பக்தர்கள் தங்களது செருப்புகளை உடைமைகள் மையத்தில் உள்ள ஊழியர்களிடம் ஒப்படைக்கும்போது, அவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்ணுடன் ஸ்கேனிங் செய்யப்பட்ட ரசீது வழங்கப்படுகிறது.
பின்னர், அந்த செருப்புகள் தனித்தனியாக பைகளில் சேகரித்து வைக்கப்படுகின்றன.
பக்தர்கள், உடைமைகள் மையத்தில் உள்ள ஊழியரிடம் அந்த ரசீதை காண்பித்தால், அதனை ஸ்கேன் செய்தவுடன் பக்தருடைய செருப்பு எந்த வரிசையில் உள்ளது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும்.
இந்த சோதனை முயற்சியிலான புதிய நடைமுறைக்கு 98 சதவீத பக்தர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Summary:
Recognizing the challenges faced by pilgrims in keeping their footwear safe at Tirupati Temple.
The temple authorities have introduced a modern Radio Frequency Scanning method for their safekeeping.
As a pilot project at the ATC baggage center, devotees now receive a scanned receipt with their photograph and contact details when they deposit their slippers, which are then stored in individual bags.
When returning, scanning the receipt allows staff to accurately locate the devotee’s footwear.
With a 98% approval rate from pilgrims, the Tirupati Devasthanam is set to implement this efficient system in all its baggage storage areas shortly.