பாம்பு கடி” பற்றிய சில தகவல்கள்..

329.jpg

1. கடித்த இடம், மனிதன் கடித்தது போல் அனைத்து பற்களும் வரிசையாக பதிந்து காணப்படுகிறதா….???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடி அலல…

2. கடித்த இடம், இரண்டு பற்கள் மட்டும் சற்று இடைவெளியில் பதித்து காணப்படுகிறதா….??? கடித்த இடம் சற்று தடித்து (வீங்கி)
காணப்படுகிறதா..?? கடுமையான வலி இருக்கிறதா..???
இந்த அறிகுறி விஷப்பாம்பு கடித்ததாகத் தான் இருக்கக் கூடும்…
முதலுதவி:-
1.இறுக்கி கட்டுப் போட வேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்த பகுதி அழுகி போகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப் போடுவது நல்லது.
2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.
3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடைய கூடாது. அவர் பதற்றமடையும் போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
4.பாம்பு கடித்து விட்டால் வேகமாக நடக்க கூடாது. ஏனெனில் நாம் வேகமாக நடக்கும் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் நம் ரத்தத்தில் கலந்துள்ள விஷம் விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவு படுத்துகிறது
4.இயன்ற வரை பாம்புக் கடிக்குள்ளானவரை தைரியமூட்டவும். எந்த அளவிற்கு அவரின் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம்.
5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தை விடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.
6.பாம்பு கடித்து விட்டால், பாம்புக் கடிக்குள்ளானவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதீர்கள். ஏனெனில் பெரும்பாலன தனியார் மருத்துவமனையில் பாம்புகடித்தோரை “அட்மிட்” செய்வதில்லை. எனவே கால தாமதம் செய்யாமல், உடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும்.
7.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக் கூடிய நிலை ஏற்படலாம். எனினும் இவ்வாறு அடிக்க , பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால் தலையை வைத்துத் தான் பாம்பை இனம் காணலாம். கடி பட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.
பாம்பு கடித்தவர்களின் மன உறுதி மிகவும் அவசியம் ஆகவே அவர்களுக்கு தைரியம் சொல்லுங்கள்.

Summary :

Identify venomous vs non-venomous snake bites and follow crucial first aid steps. Keep the victim calm and seek immediate government hospital care.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *