நீரிழிவு நோயாளிகள் உணவுக் கட்டுப்பாடும், வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியம் என்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இயற்கை உணவுகளை சேர்ப்பது முக்கியம்.
அந்த வகையில், இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பாகற்காய் டீயை எளிதாக எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 1
தேன் – 1 ஸ்பூன் (அல்லது நாட்டு சர்க்கரை, விருப்பமிருந்தால்)
தயாரிக்கும் முறை
பாகற்காயின் தோலை சீவி, சிறிய துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவ வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, நறுக்கிய பாகற்காய் துண்டுகளை சேர்க்கவும்.
இதை மிதமான தீயில் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பாகற்காயின் சத்து நீரில் வெளியேறியவுடன் அடுப்பை அணைத்து, ஆற விடவும்.
பின், ஒரு டம்ளரில் வடிகட்டி, இனிப்பு தேவைப்பட்டால் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.
இந்த டீயின் ஆரோக்கிய நன்மைகள்
இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
கல்லீரலை சுத்தப்படுத்தி, உடல் நலத்தை மேம்படுத்தும்.
கண்களுக்கு நல்ல ஊட்டச்சத்து வழங்கும்.
இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம், ஏனெனில் சிலருக்கு பாகற்காய் அதிகம் பயன்படுத்தினால் இரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக குறையும் அபாயம் இருக்கலாம்.
நாள்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய் டீ குடித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை தொடருங்கள்.