மாமதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? மக்கள் தீர்மானிப்பார்கள் – முதலமைச்சர் ஸ்டாலின்

283.jpg

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா? அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தை மாற்றி, மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அங்கு தீபத் தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக மதுரை காவல்துறை அனுமதி மறுத்தது.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் விதித்திருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், உடனடியாக தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறு இரண்டாவது முறையாகவும் உத்தரவிட்டார். இதனால் திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர்கள் திரளாகக் கூட, காவல்துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட பதிவில், மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் விரும்புவது மெட்ரோ ரயில், ஏய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் போன்ற முன்னேற்றத் திட்டங்களே. அரசியலின் பெயரில் குழப்பம் தேவையில்லை; மக்கள் தாமே தீர்மானிப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary :

Amid the Karthigai Deepam controversy, CM Stalin says Madurai needs development—Metro rail, AIIMS, industries, and jobs—urging people to decide.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *