45 கி.மீ வேகத்தில் வீசும் காற்று: கடலுக்கு செல்லா என மீனவர்கள் எச்சரிக்கை!

328.jpg

சென்னை: மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “இன்றும் நாளையும் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35–45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டது.

முக்கிய தகவல்கள்:

  • டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளில் தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 35–45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

  • டிசம்பர் 13ம் தேதிக்கு எச்சரிக்கை இல்லை.

  • வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 35–45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 11–13 வரை பிற எச்சரிக்கை இல்லை.

  • அரபிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் எச்சரிக்கை இல்லை.

  • குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் டிசம்பர் 11ம் தேதி காற்று மணிக்கு 35–45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்; டிசம்பர் 12–13 எச்சரிக்கை இல்லை.

இதையடுத்து, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Summary :

45 km/h winds expected along Tamil Nadu coasts. Mayiladuthurai fishermen are prohibited from venturing into the sea until further notice.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *