உத்தரகாண்ட் மாநிலத்தில், பத்ரிநாத் அருகே இன்று காலை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 57 பணியாளர்கள் சிக்கி, உயிருக்கு போராடும் அவலநிலை உருவாகியுள்ளது. நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பனிக்கட்டிகளின் அடியில் புதைந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீட்பு பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு, இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள 41 பேரையும் கண்டுபிடிக்க முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மீட்பு பணியில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த பனிச்சரிவு அபாயம் ஜம்மு-காஷ்மீரிலும் ஏற்படும் சாத்தியம் உள்ளதால், அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்ரிநாத் மற்றும் அதனை சுற்றியுள்ள ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.