தீபாவளி என்றாலே இனிப்பு, பலகாரம் நினைவுக்கு வரும். ஆனால் சர்க்கரை நோயால் அவதிப்படுவோர்கள் அவ்வளவு எளிதாக இனிப்பு சாப்பிட முடியாது என்பதும் உண்மை. அதனால் தான், இந்த சிறப்பான பதிவில் சர்க்கரை இல்லாமல் ருசியாக செய்யக்கூடிய சில ஆரோக்கியமான இனிப்புகளை பார்க்கலாம்.
இந்த ரெஸிப்பிகள் ஜாகிரி (வெல்லம்), தேன், டேட்ஸ், ஸ்டீவியா போன்ற இயற்கை இனிப்புகளால் தயாரிக்கப்படுகின்றன. அதனால் சர்க்கரை நோயாளிகளும் தங்களுக்குப் பிடித்த இனிப்பை நிம்மதியாக சாப்பிடலாம் அதுவும் அளவோடு.
டேட்ஸ் & நட்ஸ் லட்டு (Dates & Nuts Ladoo):
தேவையான பொருட்கள்:
- கொட்டை நீக்கிய டேட்ஸ் – 1 கப்
- முந்திரி – அரை கப்
- பாதாம் – கால் கப்
- வால்நட் அல்லது பிஸ்தா – 2 டேபிள்ஸ்பூன்
- நெய் – 1 டீஸ்பூன்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை:
டேட்ஸை சிறிய துண்டுகளாக நறுக்கவும். முந்திரி, பாதாம், வால்நட் ஆகியவற்றை சிறிது வறுத்து கொரகொரவென அரைக்கவும். காய்ந்த வாணலியில் நெய் சேர்த்து டேட்ஸை 2 நிமிடம் வறுக்கவும். அதில் அரைத்த நட்ஸ் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை கொஞ்சம் குளிர்ந்ததும் உருட்டி லட்டு போல வடிவமைக்கவும்.
நன்மைகள்:
டேட்ஸ் இயற்கையான இனிப்பானது. இதில் இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் . சர்க்கரை சேர்க்காததால், டயபட்டிக் நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த இனிப்பு ஆகும்.
ஓட்ஸ் பால் பாயாசம் (Oats Milk Payasam):
தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் – அரை கப்
- பால் – 2 கப்
- தேன் அல்லது ஸ்டீவியா( இயற்கை இனிப்பூட்டி தாவர வகை இலை) – தேவைக்கேற்ப
- நெய் – 1 டீஸ்பூன்
- முந்திரி, திராட்சை – சிறிதளவு
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
செய்முறை:
ஓட்ஸை நெய்யில் சிறிது வறுத்து , பாலை சேர்த்து கொதிக்க விடவும். ஓட்ஸ் மென்மையாக ஆனதும், தேன் அல்லது ஸ்டீவியா சேர்த்து கிளறவும். ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.
வெதுவெதுப்பாக பரிமாறவும்.
நன்மைகள்:
ஓட்ஸ் நார்ச்சத்து மிகுந்தது, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. பால் சேர்க்கப்படுவதால் புரதம் மற்றும் கால்சியம் இருக்கிறது. இதனால் சுவையும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
தேங்காய் பால் புட்டிங் (Coconut Milk Pudding – Sugar-Free):
தேவையான பொருட்கள்:
- தேங்காய் பால் – ஒன்றரை கப்
- ஜாகிரி சிரப் / ஸ்டீவியா – தேவைக்கேற்ப
- சியா சீட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்
- கோ கோ பவுடர் – 1 டீஸ்பூன்
- ஏலக்காய் அல்லது வெண்ணிலா எசென்ஸ் – சிறிதளவு
- டிரைஃப்ரூட்ஸ் – அலங்கரிக்க
செய்முறை:
ஒரு பவுளில் தேங்காய் பால், ஜாகிரி சிரப், கோகோ பவுடர், சியா சீட்ஸ் சேர்த்து கலக்கவும். அதை 3–4 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்கவும் (சீட்ஸ் புளிச்சு புட்டிங் மாதிரி வரும்). மேலே டிரைஃப்ரூட்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
நன்மைகள்:
தேங்காய் பாலில் நல்ல கொழுப்பு இருக்கிறது . சியா சீட்ஸ்லில் நார்ச்சத்து, ஒமேகா 3 ஆகியவை உடலுக்கு நல்லது. ஜாகிரி அல்லது ஸ்டீவியா பயன்படுத்துவதால் சர்க்கரை இல்லாமல் இனிப்பு சுவை கிடைக்கும்.
Summary:
Celebrate Diwali with delicious, healthy sweets made without sugar. These recipes use natural sweeteners like jaggery, dates, and stevia for a safe treat. Perfect for diabetic patients who don’t want to miss the festive sweetness. Stay healthy, stay happy, and enjoy every bite guilt-free this Diwali