தெலுங்கானாவில் கடும் வெயிலால் 5 பேர் பலி – Summer Deaths
Summer Deaths – வெப்ப அலையின் கோர தாண்டவம்: ஒரே நாளில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
தெலுங்கானா மாநிலம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்மல் மாவட்டம், குர்ண்ண பேட்டையைச் சேர்ந்த சங்கர் (வயது 48) மற்றும் ராஜூ (வயது 42) ஆகியோர் முன்தினம் ஒரு துக்க நிகழ்ச்சியில் ட்ரம்ஸ் வாசித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
கடும் வெயிலில் களைத்துப்போன சங்கரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜூவும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றொரு சோக சம்பவத்தில், கரீம் நகர், சங்கரபட்டினத்தைச் சேர்ந்த ஜல்லம்மா (வயது 59) அறுவடை செய்த நெல்லை உலர்த்திக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அடிலாபாத் மாவட்டம், பீம்பூரைச் சேர்ந்த சவான் கேசவ் (வயது 60) என்பவர் விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தபோது வெப்பம் தாங்காமல் விழுந்து உயிரிழந்தார்.
இவர்களைத் தொடர்ந்து, மஹபூபாபாத் மாவட்டம், ஹனுமண்டலாவைச் சேர்ந்த பிரேமலதா (வயது 60) அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக சென்றபோது, நெல் விற்பனை நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக ஒரே நாளில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பது தெலுங்கானா முழுவதும் பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் வெயிலின் தாக்கம் குறித்து அச்சத்தில் உள்ளனர்.
Summary:
A severe heatwave in Telangana has tragically claimed the lives of five people in a single day.
This series of heat-related deaths has caused widespread shock and fear among the residents of Telangana, highlighting the dangerous impact of the rising temperatures.