ஆளுநருக்கு தனித்த அதிகாரம் இல்லை – மாநிலத்தில் இரட்டை ஆட்சிமுறை இருக்க முடியாது: உச்சநீதிமன்றம்

247.jpg

டெல்லி:
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசே நிர்வாக அதிகாரத்தை கொண்டுள்ளது என்றும், ஒரு மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு நீண்ட காலம் ஒப்புதல் வழங்காமல் வைத்திருப்பது கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது என்பதை தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், ஆளுநர் செயல்படக்கூடிய 3 வழிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளது:

மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தல்

ஜனாதிபதிக்கு அனுப்புதல்

சட்டசபைக்கு திருப்பி அனுப்புதல்

இதிலிருந்து ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பதே ஆளுநருக்கு பிரத்தியேக அதிகாரம் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்வைத்த 14 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

தீர்ப்பில்,

  • சட்டசபை அனுப்பிய மசோதாக்களை காரணமின்றி நீண்ட காலம் நிறுத்திவைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை

  • அமைச்சரவை ஆலோசனையின் அடிப்படையில் தான் ஆளுநர் பொதுவாக செயல்பட வேண்டும்

  • நிதி மசோதாவாக இல்லாதபட்சத்தில், ஒப்புதல் அளிக்க மறுத்தால் அது சட்டசபைக்கு திருப்பி அனுப்பப்படவேண்டும்

என கூறப்பட்டுள்ளது.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே ஆட்சியின் மையம். இரண்டு நிர்வாக மையங்கள் இருப்பது அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது” என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு முன்வைத்த “மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் ஆளுநருக்கான 4வது அதிகாரம் உள்ளது” என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Summary :

The Supreme Court ruled that governors cannot stall bills indefinitely and must choose one of three options, affirming the authority of elected state governments.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *