“காப்பாற்றுங்கள்!” – தாலிபானின் தாக்குதலில் துவண்ட பாகிஸ்தான், சவுதி–கத்தாரிடம் உதவி வேண்டுகோள்!

111.jpg

காபூல்:
பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் கடும் துப்பாக்கிச்சண்டை வெடித்தது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்த சண்டையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் அரசு சவுதி அரேபியா மற்றும் கத்தாரிடம் அவசர உதவி கோரியுள்ளது.

தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாக தீவிரமாகி வருகிறது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதன் பின்னர், பாகிஸ்தானிலும் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி அமைய வேண்டும் என டிடிபி (Tehrik-i-Taliban Pakistan) அமைப்பு கோரியுள்ளது. இதை பாகிஸ்தான் நிராகரித்ததால், எல்லையில் இருதரப்பும் இடையிடையே மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

சில மாதங்களுக்கு முன் டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ராணுவ வீரர்களை கொன்றனர். இதற்கு பதிலடி அளிக்க பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட தாலிபான் தலைவர்கள் உயிரிழந்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது.

“எங்களுடன் விளையாட வேண்டாம், இல்லையெனில் விளைவுகள் மோசமாகும்,” என ஆப்கானிஸ்தான் அரசு எச்சரித்தது.

அதன் சில நாட்களிலேயே, தாலிபான் போராளிகள் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் ராணுவ வீரர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இரு நாடுகளிலும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சவுதி அரேபியா மற்றும் கத்தார் தலையிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் அமைதி நிலவச் செய்தன. ஆனால், அந்த அமைதி நீடிக்கவில்லை.

நேற்று இரவு மீண்டும் கந்தகார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் எல்லையில் தாலிபான் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கிடையில் கடும் துப்பாக்கிச்சண்டை வெடித்தது. யார் முதலில் தாக்குதல் தொடங்கினர் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆப்கானிஸ்தான் அரசு பேச்சாளர் ஜபிஉல்லா முஜாகித் தெரிவித்ததாவது:

“பாகிஸ்தான் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி, டேங்குகளால் குண்டுவீசி தாக்கியது. இதனால் 12 பொதுமக்கள் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவம் நடவடிக்கை எடுத்தது. பல பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்; அவர்களின் டேங்கிகள் கைப்பற்றப்பட்டன.”

தாலிபான் ராணுவம் கைப்பற்றிய பாகிஸ்தான் டேங்கியில் உலா வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், “பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடி தொடரும்,” என தாலிபான் எச்சரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசு மீண்டும் சவுதி அரேபியா மற்றும் கத்தாரிடம் உதவி கோரியுள்ளது.

“எங்களை காப்பாற்றுங்கள்,” என கதறி பாகிஸ்தான் நாடுகள் இரண்டின் கதவைத் தட்டியுள்ளது.

தற்போது பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் இருநாட்டு படைகளும் உயர் விழிப்புநிலையில் உள்ளன. நிலைமை எப்போது வெடிக்கும் என தெரியாத நிலையில், எல்லைப்பகுதியில் பதட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.

Summary:
Taliban fighters launched new assaults on Pakistan’s border, killing over 50 soldiers. The crisis forced Islamabad to seek immediate help from Saudi Arabia and Qatar to control the escalating violence.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *