தமிழ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் – வனிதா விஜயகுமார் வலியுறுத்தல்

0461.jpg

தமிழ் திரைப்பட நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவுமான வனிதா விஜயகுமார், திரைத்துறையில் தமிழ் நடிகைகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

வனிதாவின் திரையுலக பயணம்

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் திரையுலகிலிருந்து காணாமல் போன அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்களின் கவனத்தை பெற்றார். அதன் பிறகு அநீதி, அந்தகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சைகள் சூழ்ந்த வனிதா, மூன்று திருமணங்களை அனுபவித்திருக்கிறார். அவரது மகளான ஜோவிகா, பிக்பாஸின் கடந்த சீசனில் கலந்து கொண்டார். தற்போது, அவர் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் ஈடுபட்டுள்ளார்.

“தமிழ் நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் வேண்டும்”

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, தமிழ் சினிமாவில், தமிழ் நடிகைகளுக்கு மிகக்குறைவான வாய்ப்புகள் கிடைப்பதை பற்றிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

“மொழியை விட, திறமையை முன்னிலைப்படுத்த வேண்டும். திரையுலகில் பல ஊமை படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. சார்லி சாப்ளின் கூட, தனது ஊமை படங்கள் மூலம் உலகளவில் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் திறமையான நடிகைகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு குறைவாகவே வாய்ப்புகள் தரப்படுகின்றன.

தமிழ் நடிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தமிழ் நடிகைகள் மட்டுமே நடிக்கக்கூடிய பல படங்கள் உருவாக வேண்டும்.
கோலிவுட்டில் பிற மொழி நடிகைகளே அதிகம், ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். இவ்வாறு கூறிய வனிதாவின் கருத்து, சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகிறத.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *