பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களின் வருகைப்பதிவு எவ்வளவு? வெளியான தகவல்
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மொத்தம் 26 நாட்கள் நடைபெற்றது. பின்னர், இந்த கூட்டத்தொடர் கடந்த 4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைப்பதிவு குறித்த புள்ளிவிவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அந்த விவரங்களின்படி, திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, கிரிராஜன் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை ஆகிய மூன்று எம்.பி.க்களும் அதிகபட்சமாக அனைத்து 26 நாட்களும் அவைக்கு தவறாமல் வருகை தந்துள்ளனர்.
அதேசமயம், பாமகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் குறைந்தபட்சமாக வெறும் 6 நாட்கள் மட்டுமே மாநிலங்களவைக்கு வருகை புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வருகைப்பதிவு விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக எம்.பி.க்கள் வருகைப்பதிவு விவரம்:
ப.சிதம்பரம் – 15 நாட்கள்
திருச்சி சிவா – 26 நாட்கள்
கல்யாண சுந்தரம் – 19 நாட்கள்
அந்தியூர் செல்வராசு – 15 நாட்கள்
சந்திர சேகரன் – 18 நாட்கள்
வி.சண்முகம் – 13 நாட்கள்
தர்மர் – 23 நாட்கள்
முகமது அப்துல்லா – 23 நாட்கள்
கிரிராஜன் – 26 நாட்கள்
ராஜேஷ்குமார் – 19 நாட்கள்
இளங்கோ – 20 நாட்கள்
கனிமொழி சோமு – 22 நாட்கள்
வைகோ – 20 நாட்கள்
எம்.சண்முகம் – 23 நாட்கள்
வில்சன் – 25 நாட்கள்
அன்புமணி ராமதாஸ் – 6 நாட்கள்
ஜி.கே.வாசன் – 24 நாட்கள்
தம்பிதுரை – 26 நாட்கள்
Summary:
A report reveals the attendance records of Tamil Nadu MPs in the Rajya Sabha during the recent 26-day budget session. Three MPs (Tiruchi Siva, Girirajan, and Thambidurai) had perfect attendance, while PMK’s Anbumani Ramadoss attended only 6 days.
The varying attendance has garnered attention in political circles.