கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த அதிமுகவினர்
கடந்த மார்ச் 14-ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேளாண் பட்ஜெட்டும் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், பட்ஜெட் மீதான விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
தற்போது, மார்ச் 24 முதல் துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதங்களின்போது அமைச்சர்கள் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய சட்டசபை அமர்வில் டாஸ்மாக் தொடர்பான விவகாரத்தை முன்வைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டையில் ‘அந்த தியாகி யார்?’ என்ற பதாகையை அணிந்து தெரிவித்தனர்.
கேள்வி நேரம் முடிந்தவுடன், இதே பிரச்சினை குறித்து பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கோரினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, பதாகைகளை ஏந்தி வந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மக்கள் பிரச்சனைகளைப் பற்றி சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்தனர்.
Summary: AIADMK MLAs, led by Edappadi K. Palaniswami, protested in the Tamil Nadu legislative assembly by wearing black shirts, alleging the government denied them permission to discuss public issues. This followed a previous day’s protest related to the TASMAC issue, which led to the suspension of 15 AIADMK MLAs.