தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 20 ஆம் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்ச கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி அடுத்த நாள் அக்டோபர் 21 ஆம் தேதியும் பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை அளிக்க தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீபாவளி பண்டிகை வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாட்கள் சனி மற்றும் ஞாயிறு என்பதால் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை உறுதியாகியுள்ளது.
அதே நேரம் தங்கள் சொந்த ஊருக்கு சென்று மீண்டும் பணி நிமித்தமாக, சென்னை திரும்பும் வெளியூர் மக்களுக்கு, வசதியாக பண்டிகை முடிந்து அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களின் இந்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நடப்பாண்டும் விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Summary: