சொந்த மாவட்டத்தில் அரசு வேலை வாய்ப்பு! ஊராட்சி செயலர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

0215.jpg

சென்னை:
தமிழக அரசு, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1,300 ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப அறிவித்திருந்தது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (நவம்பர் 8) கடைசி நாளாகும்.

பணியின் தன்மை

ஊராட்சி செயலர் பணியில் உள்ளவர், அரசு திட்டங்களை ஊரக அளவில் சரியாக நிறைவேற்றுவது, குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளை உறுதிசெய்தல், சுகாதாரம் மற்றும் சுத்தம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணித்தல், வரி வசூல் செய்தல் போன்ற பொறுப்புகளை வகிக்கிறார். இது அரசு திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் முக்கிய பதவியாகும்.

மொத்த காலியிடங்கள்

மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக மொத்தம் 1,300 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தமது சொந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு

01.07.2025 நிலவரப்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 34 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி சில பிரிவுகளுக்கு வயது தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பம் www.tnrd.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கு “ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து, விளம்பரமும், வழிமுறைகளும் முழுமையாக வாசித்து, தகுதி உள்ளவர்கள் தேவையான விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை

  • நவம்பர் 10 முதல் 24 வரை: விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும்.

  • டிசம்பர் 3: தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

  • டிசம்பர் 4 முதல் 12 வரை: மாவட்ட வாரியாக நேர்முகத் தேர்வுகள் நடைபெறும்.

  • டிசம்பர் 16: தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

  • டிசம்பர் 17: நியமன ஆணைகள் வழங்கப்படும்.

சொந்த மாவட்டத்திலேயே அரசு வேலை கிடைக்கும் இந்த வாய்ப்பு, பலரின் அரசு வேலை கனவை நனவாக்கும் முக்கிய சந்தர்ப்பமாக கருதப்படுகிறது.

Summary :
Tamil Nadu Govt’s 1,300 Panchayat Secretary posts close today. Eligible 10th pass candidates can apply online via tnrd.tn.gov.in.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *