வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குளறுபடிகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி”யை இன்று (நவம்பர் 4) முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பணி டிசம்பர் 4 வரை நடைபெறும்.

தற்போது வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், நிரந்தர முகவரி மாற்றியவர்கள் மற்றும் இரட்டைப் பெயர்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தீர்க்க, அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் இணைந்து வீடு தோறும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகள் கூட்டத்தில், இந்த தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை ஒத்திவைக்க கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:
“இந்தக் கணக்கெடுப்பு 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. அந்தப் பட்டியல்களில் பெயர் உள்ள வீடுகளுக்கே ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செல்வார்கள். புதிய வாக்காளர்களுக்கு உரிய படிவங்கள் வழங்கப்படும்; அவற்றை மூன்று முறை வருகைகளில் ஏதேனும் ஒன்றின் போது சமர்ப்பிக்கலாம். முகவரி மாற்றம் செய்தோர்கள் மற்றும் 18 வயது நிறைவுற்றவர்கள் டிசம்பர் 7 முதல் ஜனவரி 3க்குள் ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்,” என அவர் தெரிவித்துள்ளார்.
Summary :
The Election Commission launches a special drive in Tamil Nadu to remove fake voters and update records; house-to-house survey till Dec 4.









