You are currently viewing வீட்டுமனை: கனவு நனவாகும்! இலவச பட்டா!

வீட்டுமனை: கனவு நனவாகும்! இலவச பட்டா!

0
0

கலைஞர் கனவு இல்லத் திட்டம்: இலவச வீட்டு மனை பட்டா யாருக்கு?

இணையவழி பட்டா மாறுதலுக்கு 3,078 நில அளவையர்களுக்கு ₹15.60 கோடி மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும், கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துறை சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தேனி, நெல்லை, சென்னை, காஞ்சிபுரம் நிலஅளவை அலுவலகங்கள் மற்றும் மதுரை மண்டல அலுவலகம் உட்பட சில கட்டிடங்கள் ₹71.90 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

நில ஆவணங்களைப் பாதுகாக்க 80 வட்டாட்சியர் அலுவலகங்களில் ₹8 கோடி மதிப்பீட்டில் காம்பாக்டர்கள் நிறுவப்படும். ஏற்கனவே 4 மாவட்டங்களில் நவீன நிலஅளவை முறை நடைமுறையில் உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 454 நில அளவையர்களுக்கு ₹27.24 கோடி மதிப்பீட்டில் நவீன நில அளவைக் கருவிகள் வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் ஒழிப்புச் சட்டங்களின் கீழ் மனைவரி பதிவேடுகள் தயார் செய்யப்பட்ட 40 கிராமங்களில் வருவாய் பின்தொடர் பணிகள் மூலம் 10,000 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 31,117 பயனாளிகளுக்கு பட்டா வழங்க ₹84.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Summary:  Tamil Nadu government announces ₹15.60 crore laptops for surveyors to facilitate online land patta transfers, modernizes land survey equipment, and provides free land pattas for beneficiaries of the Kalaignar Dream Housing Scheme, along with infrastructure upgrades to land survey offices.

Leave a Reply