தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை என வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை !எந்த எந்த மாவட்டங்கள் தெரியுமா?

7eee1e2bf3b605596e8bf5ea1d57c56e-e1759400554317.jpg

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த நாட்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 23 முதல் 25 வரை – தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.செப்டம்பர் 26 மற்றும் 27 – கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.செப்டம்பர் 28 – தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

இன்று சென்னை நகரத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். வட மற்றும் தென் தமிழக பகுதிகள்,வட தமிழகத்தில் சில இடங்கள்,தென் தமிழகத்தில் ஓரிரு இடங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால்

இவ்விடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.கடல் பகுதிகளில் எச்சரிக்கை தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில்சுமார் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Summary: The Meteorological Department has predicted widespread rainfall in Tamil Nadu over the coming days. From September 23 to 25, several districts will receive moderate showers. On September 26 and 27, heavy rainfall is expected in the hill regions of Coimbatore and certain areas in Nilgiri. On September 28, light to moderate rain is likely in parts of Tamil Nadu. Chennai, Puducherry, and Karaikal are expected to experience moderate rain with thunder and lightning. Additionally, strong winds up to 60 kmph have been forecast over the Southwest Bay of Bengal, Gulf of Mannar, and adjoining Kanyakumari sea areas.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *