தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரையரங்கிற்கு வருவதற்கும் முன்பே ரூ.300 கோடி வசூலைக் குவித்து தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைக்கத் தயாராகியுள்ளது.

நேற்று வெளியான ‘தளபதி கச்சேரி’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விஜய் – பூஜா ஹெக்டேவின் எலக்ட்ரிக் எனர்ஜி கொண்ட நடனமும், மமிதா பைஜூவின் ஸ்பார்க் கலந்த ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
படத்தின் டிஜிட்டல் உரிமை Amazon நிறுவனத்துக்கு ரூ.120 கோடிக்கு விற்பனையானது. திரையரங்கு உரிமைகள் ரூ.130 கோடிக்கு அருகிலும், சேட்டிலைட் உரிமை ரூ.50 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.30 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் படக்குழுவிற்கு மொத்தம் ரூ.300 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
ஜனவரி 9 அன்று தனி வெளியீடாக வெளியாகும் ‘ஜனநாயகன்’, விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு வானளாவியுள்ளது. இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டும் தமிழ் சினிமாவின் முதல் படம் ஆகும் வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.







